fbpx

அதிகாலையிலே சோகம்.. மகளிர் விடுதியில் பயங்கர தீ விபத்து..!! 2 பேர் உடல் கருகி பலி..

மதுரையில் கட்ரபாளையம் அருகே உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.. மேலும் பலர் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் கட்ரபாளையம் அருகே பெண்கள் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த பெண்கள் விடுதியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியிருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலையில் இந்த விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விடுதியில் உள்ள பழைய பிரிட்ஜில் இருந்து தான் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அறை முழுவதும் தீ பரவியதால் சுற்றி கரும்புகை உருவாகி சில நிமிடங்களிலே தீப்பிடித்து எரிந்தது. சுதாகரித்துக்கொண்ட சில அறையை விட்டு வெளியே வந்தனர். தூங்கி கொண்டிருந்த சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்டு உடனடியாக ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பெண்கள் உயிரிழந்தனர். பரிமளா சவுந்தரி, சரண்யா ஆகிய 2 பெண்கள் உயிரிழந்தனர்.

மேலும் மூச்சுத்திணறல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. போலீசாரும் அப்பகுதிக்கு வந்து எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read more ; மக்களே… 15-ம் தேதி இலவச சிறப்பு மருத்துவ முகாம்..! மாத்திரைகள் அனைத்தும் இலவசம்…

English Summary

A fire broke out in a women’s hostel near Katrapalayam in Madurai. Two women died in this fire accident.

Next Post

ஆயுஷ்மான் பாரத் திட்டம்!. மூத்த குடிமக்களுக்கு எவ்வளவு இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது?

Thu Sep 12 , 2024
Ayushman Bharat Scheme, AB PM-JAY: How Much FREE Health Insurance Cover Is Offered To Senior Citizens?

You May Like