fbpx

நாள்பட்ட நச்சுக்கள், கெட்ட கொழுப்பை வெளியேற்ற, ஹோம் மேட் டீடாக்ஸ் ஜூஸ் ரெசிபி.!

உடம்பில் தங்கி இருக்கக்கூடிய நச்சுக்கள் வயிற்றுப்புண் வாய் புண் மற்றும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற அருமையான மற்றும் ஆரோக்கியமான ஒரு ஜூஸ் எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.

இந்த ஜூஸ் தயாரிப்பதற்கு சிறிய அளவிலான வெள்ளை பூசணிக்காயை எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றின் தோல் மற்றும் விதைகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இவற்றுடன் சிறிதளவு கருவேப்பிலை, சிறிதளவு மல்லி இலைகள் மற்றும் 6 மிளகு ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும் .

இப்போது மிக்ஸி ஜாரில்
நறுக்கிய வெள்ளை பூசணிக்காய், கருவேப்பிலை, மல்லி இலைகள் மற்றும் மிளகு ஆகியவற்றை போட்டு நன்றாக அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம். இவற்றை வடிகட்டி தேன் அல்லது உப்பு கலந்து குடிக்கலாம். இந்த ஜூஸை ஆஸ்துமா இருப்பவர்களும் குடிக்கலாம். மேலும் இது குடிப்பதால் சளி மற்றும் இருமல் வராது.

வாரத்தில் ஒரு நாள் இந்த பானத்தை வெறும் வயிற்றில் குடித்து வர நாள் பட்ட நச்சுக்கள், கெட்ட கொழுப்பு, வயிற்று புண் ஆகியவற்றைப் போக்கும் தன்மை கொண்டது. மேலும் உடலின் உஷ்ணத்தை போக்கி குளிர்ச்சியையும் கொடுக்கும். மேலும் இது ஒரு சுவையான ஜூஸாகும். எல்லா வயதினரும் இந்த ஜூஸை குடிக்கலாம்.

Next Post

வெளிநாட்டு கணவர்.! நள்ளிரவில் ஆண் நண்பர்களுடன் கும்மாளம்.! மனைவிக்கு நேர்ந்த கொடூரம்.!

Thu Dec 14 , 2023
கடலூர் அருகே ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதால் மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் கணவனை கைது செய்திருக்கின்றனர். கடலூர் மாவட்டம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் 42 வயதான இவர் குவைத்தில் வேலை செய்துவிட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பி இருக்கிறார். இவரது மனைவி சரஸ்வதி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் […]

You May Like