சேலம் மாவட்ட பகுதியை சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க விவசாயிக்கு கடந்த 7 ஆண்டுகளாக விரிந்த கார்டியோமயோபதி இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில், கடுமையான வென்ட்ரிகுலர் செயலிழந்துள்ளது.
இதனையடுத்து, இதயமாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், மதுரை மாவட்ட பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபர், சென்ற 14ம் தேதி சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்துள்ளார். மேலும், அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த, நிலையில் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து , இறந்த அந்த வாலிபரின் குடும்பத்தினர் உடல், உறுப்புகளை தானம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழ்நாடு உறுப்பு பதிவேட்டிற்கு அனுப்பப்பட்ட நிலையில் பின்னர், பதிவு நெறிமுறையின்படி ரேலா மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று அந்த வாலிபரின் இதயம் மதுரையிலிருந்து, சென்னைக்கு 1 மணி நேரத்தில் விமானத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது. மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், விவசாயிக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்ததால் , அவரின் உயிர் பிழைத்து நலமாக உள்ளார்.