fbpx

பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை…! தமிழக அரசு அறிவிப்பு… இந்த மாவட்டத்துக்கு மட்டும் தான்….

சென்னையில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாள் நிகழ்வு நாளை நடைபெறுவதை முன்னிட்டு 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாள் நிகழ்வு நாளை நடைபெறுவதை முன்னிட்டு அவ்விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை ஒரு நாள் மட்டும் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்.

மேலும் இந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாளன்று ஒரு நாள் மட்டும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத்துறைகள் தவிர்த்து மற்ற அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆணை வெளியிட்டது அரசு. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நான்காவது சனிக்கிழமை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பணி நாளாக அறிவித்து.

Also Read: எல்லாம் கவனம்… பொது இடத்தில் இனி இதை செய்தால் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும்…! மீறினால் கடும் நடவடிக்கை என அறிவிப்பு…!

Vignesh

Next Post

வாகன ஓட்டிகளே கவனம்... நாளை ஒரு நாள் மட்டும் தான்...! மீறி சென்றால் சிக்கல்...! போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!

Wed Jul 27 , 2022
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நிகழ்வை ஒட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நாளைநடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மாநில அமைச்சர்கள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் உட்பட பலரும் கலந்து கொள்ள உள்ளனர். […]
இருசக்கர வாகனம் ஓட்டும் சிறுவர்கள்..! எச்சரிக்கும் காவல்துறை..! பெற்றோர்களே உஷார்

You May Like