தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக 27-ம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறையானது 16-ம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு தற்போது ரேஷன் கடைகளில் 2.19 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகுப்பில் தலா 1000 ரூபாய் ரொக்கம் மற்றும் 1 கிலோ பச்சரிசி, சக்கரை மற்றும் கரும்பு ஆகியவை அடங்கிய தொகுப்புகள் கடந்த 9-ம் தேதி முதல் தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகுப்பை பெறாதவர்கள் பொங்கல் பண்டிகைக்கு பின்னர் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.