அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பகுதியில் பிஎஸ்எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘குட்பேட் அக்லி’ திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது
இந்த நிலையில் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பகுதியில் பிஎஸ்எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கத்தில் 200 அடியில் பிரம்மாண்டமான முறையில் கட் அவுட் வைக்கப்பட்டது. திடீரென கட் அவுட் சரிந்து விழுந்தது. கட் அவுட் இடிந்து விழுந்தபோது பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கட்அவுட் மற்றும் அதை வைத்திருக்கும் இரும்பு அமைப்பு விழும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. பிஎஸ்எஸ் மல்டிபிளெக்ஸுக்கு வெளியே அஜித்தின் கட்அவுட்டை நிறுவ கூடியிருந்த தொழிலாளர்கள் மற்றும் ரசிகர்கள் பீதியடைந்து ஓடினர். சம்பவத்தின் போது அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.