fbpx

இப்படியும் நடக்குமா.? மாயமான கணவன்.. 7 வருடம் கழித்து திருநங்கையாக கண்ட மனைவி.!

கர்நாடக மாநிலத்தில் 7 வருடங்களுக்கு முன்பு தொலைந்த கணவனை தேடிச் சென்ற மனைவிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தன் கணவர் திருநங்கையாக மாறியதை கண்ட அவர், செய்வதறியாது திகைத்தார். திருநங்கையாக மாறி அந்த கணவரிடம், மனைவியுடனும், குழந்தைகளுடனும் சேர்ந்து வாழக்கோரி போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

கர்நாடகா மாநிலம், ராம் நகரைச் சேர்ந்த ஐஜுர் பகுதியில், கடந்த 2017ஆம் ஆண்டு, நிதி சவால்களை சமாளிக்க முடியாமல் தனது மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளை விட்டு விட்டு மாயமானார் லக்ஷ்மண ராவ். கடந்த ஏழு ஆண்டுகளாக அவரது மனைவி போலீஸின் உதவியோடு அவரைத் தேடி வந்தார்.

தற்போது கன்னட பிக் பாஸ் ஷோவில் வெற்றி பெற்ற திருநங்கை நீதுவிற்கு பாராட்டு விழா நடந்தது. அந்த விழாவின் சில காட்சிகள் ரீல்ஸாக வெளியானது. அந்த ரீல்ஸில் விஜயலட்சுமி என்ற திருநங்கை இடம்பெற்றிருந்தார். விஜயலட்சுமியின் முகத்தோற்றம் தனது கணவரை ஒத்திருக்கவே, அந்த மனைவி மீண்டும் போலீசாரின் உதவியை நாடினார்.

அந்த ரிலீஸ் வீடியோவை எடுத்த ராஷ்மிகா என்பவரின் மூலம் திருநங்கை விஜயலட்சுமியின் முகவரியைக் கண்டறிந்தனர். முதலில் தான் லக்ஷ்மண ராவ் என்பதை மறுத்த விஜயலட்சுமி, பின் போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில், உண்மையை ஒப்புக்கொண்டார்.

ஐஜூர் காவல் நிலைய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும், விஜயலட்சுமி தனது கடந்த கால வாழ்வை நிராகரித்தார். பெண்ணின் குணமே இருப்பதால் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தான் வாழ விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 7 வருடம் கழித்து தன் கணவருடன் இணையப் போகிறோம் என்று நம்பிக்கையுடன் சென்ற அந்த மனைவி, கண்ணீருடன் தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினார். இந்த சம்பவம் அந்தப் பகுதி வாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Next Post

தாறுமாறாக உயர்ந்த அரிசி விலை..!! இதுதான் நல்ல சான்ஸ்..!! அதிரடியாக களமிறங்கிய மத்திய அரசு..!!

Sat Feb 3 , 2024
நாடு முழுவதும் அரிசியின் சில்லறை விற்பனை விலை 15% அதிகரித்துள்ள நிலையில், அடுத்த வாரம் முதல் ‘பாரத் அரிசியை’ மத்திய அரசு விற்பனை செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால், சாமானிய மக்களின் வாழ்வாதாரம் இந்த வேகத்தில் வளரவில்லை. குறைவான ஊதியம், நாளுக்கு நாள் குறைந்து வரும் வேலைவாய்ப்பு, நிரந்தரமில்லாத வேலைகள் போன்றவற்றால், சாமானிய மக்கள் இந்த விலைவாசி […]

You May Like