முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிடங்கள் : மாநிலம் முழுவதும் 750 – பயிற்சி பணியிடங்கள் (Apprentice) பதவிக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 175 காலி பணியிடங்கள், கேரளாவில் 40 பணியிடங்களும், கர்நாடகாவில் 30 பணியிடங்களும், மகாராஷ்டிரா 60, ஆந்திர பிரதேசம் 25 என மொத்தம் 750 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் முடித்திருக்க வேண்டும். மேலும், 01.04.2021 முதல் 01.03.2025 க்குள் டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். உள்ளூர் மொழி தெரிந்து இருப்பது அவசியம்.
வயது வரம்பு : இதற்கு விண்ணப்பிப்பதற்கு 01.03.2025 தேதிப்படி குறைந்தபட்சம் 20 வயதிலிருந்து அதிகபட்சம் 28 வயதுக்கு வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் : பயிற்சி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மெட்ரோ நகரங்கள் என்றால் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். நகரங்கள் என்றால் மாதம் ரூ.12 ஆயிரமும், கிராமப்புறம் மற்றும் சிறு நகரங்கள் என்றால் மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம் : இதற்கு விண்ணப்ப கட்டணம் ரூ.800 ஆகும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ரூ.600 விண்ணப்பகத்தனமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://nats.education.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.