தக்காளி விலை குறைந்து வருவதை அடுத்து, ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மொத்த சந்தைகளில் தக்காளி விலை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஒரு கிலோ தக்காளியை ரூ.40 என்ற சில்லறை விலையில் விற்குமாறு தேசியக் கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைக் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு நுகர்வோர் விவகாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
ஜூலை 14 முதல் இன்று வரை 15 லட்சம் கிலோ தக்காளி NAFED மற்றும் NCCF மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் இதில் அடங்கும்.
தேசியக் கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைக் கூட்டமைப்பு ஆகியவை கொள்முதல் செய்யும் தக்காளியின் சில்லறை விலை ஆரம்பத்தில் ஒரு கிலோவுக்கு ரூ.90 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் 16.07.2023 முதல் கிலோ ரூ.80 ஆகவும், பின்னர் 20.07.2023 முதல் கிலோ ரூ.70 ஆகவும் குறைக்கப்பட்டது. மூன்று தினங்களுக்கு முன்பு கிலோ ரூ.50 ஆக குறைக்கப்பட்டது, தற்பொழுது ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.