fbpx

28-ம் தேதி இந்த 4 மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…! அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

சென்னையில் சர்வதேச செஸ் போட்டி நடைபெற உள்ள நிலையில் 4 மாவட்டங்களுக்கு ஜூலை 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வரும் 28 ம் தேதி சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா சென்னையில் நடைபெறுகிறது. இதல் பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துக் கொள்கின்றனர். தொடக்க விழா மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடைபெற உள்ளது. தொடக்க விழாவில் தமிழகத்தின் பாரம்பரிய கலாசாரங்களை பறைசாற்றும் கலை விழா் நடைபெறும். இந்த விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 800 கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். 187 நாட்டிள் இருந்து 1500 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் தொடக்க விழாவில் கலந்து கொள்கின்றனர். பல மாநில முதல்வர்களுக்கு அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.மின்சார வசதி, தங்குமிடம் உள்ளிட்ட ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது.

தொடக்க விழா சென்னையில் நடப்பதால் 28 ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. இந்த 4 மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், அரசு நிறுவனங்கள் அனைத்திற்கும் விடுமுறை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்;  தொடக்க விழா சென்னையில் நடப்பதால் 28 ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. இந்த 4 மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், அரசு நிறுவனங்கள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கபடுகிறது. வெளிநாட்டு வீரர்களுக்கு விமான நிலையத்திலேயே வரவேற்பு வழங்கப்படும் என கூறியுள்ளார்.

Also Read: மிக கவனம்… Tnpsc Group Exam எழுத்தும் தேர்வர்களுக்கு இது அனைத்தும் கட்டாயம்… இல்லை என்றால் நீங்க தேர்வு எழுத முடியாது…!

Vignesh

Next Post

மக்களே இன்று தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்..!!

Sun Jul 24 , 2022
அனைவரும் இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்று 32-வது சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கொரோனா தொற்றால் மக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். பலர் உயிரிழந்துள்ளனர். எனவே, தடுப்பூசி போட்டுக் கொள்வதே பாதுகாப்பானது. நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடந்து வருகிறது. […]

You May Like