ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று சென்னை உள்ளிட்ட 9 மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவிடுவது வழக்கம். தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உள்ளூர் விடுமுறை வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த விடுமுறை தினங்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். அந்த வகையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, இன்று சென்னை உள்ளிட்ட 9 மாவட்டத்திற்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அரசு தனது அறிவிப்பில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, இன்று சென்னை ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை. அதன் படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு பதில் 17.09.2022 சனிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.