fbpx

பெற்றோர்கள் கவனத்திற்கு…! 6-ம் தேதி பள்ளிகளுக்கு லீவ்…! எந்த மாவட்டத்திற்கு…? விவரம் உள்ளே…

ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 6-ம் தேதி அன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவிடுவது வழக்கம். தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உள்ளூர் விடுமுறை வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த விடுமுறை தினங்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். அந்த வகையில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 06.01.2023 தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மாவட்ட ஆட்சியர் தனது அறிவிப்பில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, 06.01.2023 தேதி வியாழன்கிழமை சென்னை மாவட்டத்திற்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு பதில் 21.01.2023 சனிக்கிழமை அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

அதிரடி மாற்றம்...! வட்டி வீதங்கள் உயர்த்தி அறிவிப்பு...! இது யார் யாருக்கு பொருந்தும்...? முழு விவரம்...

Mon Dec 26 , 2022
சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதாக கனரா வங்கி தெரிவித்துள்ளது. வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, வட்டி விகித திருத்தத்திற்குப் பிறகு, வங்கி இப்போது சேமிப்பு வங்கி வைப்புகளுக்கு 4% வரை வட்டியைப் பெற அனுமதி வழங்கியுள்ளது. டிசம்பர் 19 ஆம் தேதி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 55 bbps வரை வட்டி உயர்வு அறிவிக்கப்பட்ட பிறகு கனரா வங்கியின் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. […]

You May Like