கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச.24ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் இன்னும் சில நாள்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்ட துவங்கவுள்ளது. டிசம்பர் 24 முதலே அனைத்துத் தேவாலயங்களில் பிராந்தனைகளும், வழிபாடுகளும் தொடங்க உள்ளது. கேக்குகள் மற்றும் பல விதமான உணவுகளை கொண்டு கிறிஸ்தவர்கள் இந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச.24ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜனவரி 11ம் தேதியை வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.