தர்மபுரியைச் சேர்ந்த நபர் தனது முன்னாள் காதலியின் தலையில் கல்லை போட்டு கொன்று விட்டு பேஸ்புக்கில் லைவ் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தர்மபுரி மாவட்டம் பொன்னகரத்தை அடுத்துள்ள நாகமரை பகுதியைச் சார்ந்தவர் முனிராஜ். இவர் பொன்னகரம் பகுதியைச் சார்ந்த லட்சுமி என்பவரை காதலித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு லட்சுமிக்கு வேறொருவருடன் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் அவர் கர்நாடக மாநிலத்தில் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் அவரை தேடிச் சென்றுள்ள முனிராஜ் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு பின்னர் பேஸ்புக்கில் நேரலையில் வந்து என்னை இப்படி கொலைகாரனாகிட்டியே நீ இருக்கும் இடத்தை எனக்கு காட்டி கொடுத்து அந்த ஈஸ்வரனே உன்னை கொலை செய்ய வச்சிட்டான் பாத்தியா! நான்தான் கல்லை போட்டு கொலை செய்தேன் என்று நேரலையில் தெரிவித்திருக்கிறார் அவர்.
மேலும் இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் அவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தர்மபுரியில் இருந்து கர்நாடக மாநிலம் வரை தேடிப் போய் தனது முன்னாள் காதலியை கொன்றுவிட்டு அதனை பேஸ்புக்கில் நேரலையில் வந்து வாக்குமூலம் கொடுத்த நபரால் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருவரது சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.