fbpx

சாப்பாடை லேட்டாக தந்த ஹோட்டல் உரிமையாளர்! கடுப்பில் ஆட்காட்டி விரலை கடித்து சாக்கடைக்குள் துப்பிய கொடூரம்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பார்சல் சாப்பாடு லேட்டானதால் ஆத்திரமடைந்த நபர் ஹோட்டல் உரிமையாளரின் விரலை கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பேரூராட்சிக்கு அருகில் ஹோட்டல் கடை நடத்தி வருபவர் கதிரேசன் வயது 50. எந்நேரமும் கூட்டம் அதிகமாகிருக்கும் இவரது கடையில் வேலையாட்களை வைத்துக் கொள்ளாமல் இவர் ஒருவரே எல்லா வேலையும் செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று முஷ்ட குறிச்சியை சார்ந்த வழிவிட்டான் என்பவர் கதிரேசன் கடைக்கு பார்சல் சாப்பாடு வாங்க வந்துள்ளார். அப்போது பார்சல் சாப்பாடு லேட்டாகும் என கதிர் தெரிவித்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வாக்குவாதத்தில் கோபமடைந்த வழிவிட்டான் கரண்டியை எடுத்து கதிரேசனின் தலையில் தாக்கியுள்ளார்.

மேலும் ஆத்திரத்தில் கதிரேசனின் ஆள்காட்டி விரலை வேகமாக கடித்துள்ளார். இதில் கதிரேசனின் விரல் துண்டானது. இதனால் வழியில் துடித்து புலம்பினார் கதிரேசன். வழிவிட்டான் ஆத்திரத்துடன் அவரது விரலை அருகில் இருந்த கழிவு நீர் சாக்கடையில் துப்பி விட்டு சென்றார். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் இருந்தவர்கள் கதிரேசனை வீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது விரலை எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. மேலும் வழிவிட்டான் மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தப்பி ஓடிய வழிவிட்டானை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பார்சல் சாப்பாடு லேட்டானதால் ஹோட்டல் உரிமையாளரின் விரல் கடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Rupa

Next Post

திருவண்ணாமலை கோவிலில் அரிவாளுடன் சுற்றி திரிந்த நபரால் பரபரப்பு!கைது செய்யப்பட்ட நபர் பரபரப்பு வாக்குமூலம்!

Fri Mar 24 , 2023
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள் நேற்று மதியம் இளைஞர் ஒருவர் அரிவாளுடன் சுத்தி திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை கோயில் வளாகத்துக்குள் பிரகாரத்தில் அந்த இளைஞர் அரிவாளுடன் சுற்றி திரிந்தார். பின்னர் அங்கிருந்த காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து கோவில் இணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கிருந்த கண்ணாடிகளை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார். இவரது சேட்டைகளை பார்த்துக் கொண்டே இருந்த பொதுமக்கள் ஒரு […]

You May Like