மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலை வந்தவாசி அருகே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருவண்ணாமலை வந்தவாசி அருகே உள்ள சத்தியவதி கிராமம் பாடசாலை வீதியைச் சார்ந்தவர் ஆறுமுகம் இவரது மகன் தங்கராஜ் வயது 32. ஜேசிபி போன்ற கனரக வாகனங்களை இயக்கும் ஆப்பரேட்டராக இருந்து வந்தார். இவருக்கும் பகுதியைச் சார்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் இவரது மனைவியட்டும் மாத கர்ப்பமாக இருந்துள்ளார். அப்போது ஏற்பட்ட உடல் நலக் குறைவின் காரணமாக அவரது மனைவியும் அந்த குழந்தையும் இறந்து விட்டது. இதிலிருந்து தீவிரமான மன உளைச்சலில் இருந்து வந்திருக்கிறார் தங்கராஜ்.
மனைவி இறந்த துக்கத்திலிருந்து மீள முடியாமல் தவித்து வந்த தங்கராஜ் அதிலிருந்து ஒரு சிறிய மாற்றம் வேண்டும் என்பதற்காக பாண்டிச்சேரிக்கு வந்திருக்கிறார். பாண்டிச்சேரியில் உள்ள வில்லியனூரில் சிவக்குமார் என்பவருடைய பொக்லைன் இயந்திரத்தை ஓட்டி வந்துள்ளார். இவர் தங்குவதற்காக அறை ஒன்றும் வாடகைக்கு எடுத்து கொடுத்திருக்கிறார் சிவக்குமார். அந்த அறையில் தனது மனைவியின் துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் சிவக்குமார். அந்த அறையில் தனது மனைவியின் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் தங்கராஜ். இதனைத் தொடர்ந்து காவலர்களை தொடர்பு கொண்ட அவரது நண்பர்கள் தற்கொலை குறித்து தகவல் தெரிவித்தனர் . அதனைத் தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பிரயோஜத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் மிச்சம் போகும் தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.