மகாராஷ்டிராவில் கார் ஹெட் லைட் உடைந்ததால், அதனை சரி செய்யுமாறு கேட்டுக்கொண்ட ஒரு நபரை, மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் ஒருவர் அரைந்ததில், அவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து ,மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் மீது, வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதாவது, நாக்ப்பூர் பகுதியில் மாதா கோவில் அருகே நிகில் குப்தா என்பவர் தன்னுடைய சகோதரியை பார்ப்பதற்காக வந்துள்ளார்.
அப்போது, தன்னுடைய காரை அவர் பார்க் செய்தபோது, வாகனத்தின் ஹெட் லைட் வெளிச்சம் அதே பகுதியைச் சேர்ந்த முரளிதர் என்பவரின் முகத்தில் பட்டதாக தெரிகிறது.
ஆகவே ஹெட் லைட் வெளிச்சம் தான் மீது விழாதவாறு பார்த்துக் கொள்ளுமாறு, முரளிதரன் ரிசர்வ் படை வீரரிடம் பணிவாக கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால், கோபமடைந்த காவலர் அவரை ஓங்கி அறைந்து உள்ளார்.
ஆகவே சுருண்டு விழுந்த முரளிதர், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதோடு, இந்த சம்பவம் குறித்து மத்திய ரிசர்வ் படை காவலர் மீது, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளில், பல்வேறு பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.