பெங்களூருவைச் சார்ந்த நபர் ஒருவர் காவல்துறையில் அளித்துள்ள புகார் காவல்துறையைச் சார்ந்தவர்களை அதிர்ச்சியளிக்க செய்திருக்கிறது. தனது மனைவி எப்போதும் தூங்கிக் கொண்டே இருப்பதாக பெங்களூரைச் சார்ந்த கணவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கும் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூர் நகரின் பசலகுடி என்ற பகுதியில் வசிக்கும் இம்ரான் கான் என்பவர் தான் இந்த விசித்திரமான புகாரை காவல் நிலையத்தில் அளித்திருக்கிறார். இவருக்கு திருமணமாகி ஆயிஷா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று இருக்கிறது.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கும் இம்ரான் கான் தனது மனைவி எப்போதும் உறங்கிக் கொண்டே இருப்பதால் தான் நரக வேதனையை அனுபவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்திருக்கும் புகாரில் தனது மனைவி இரவு உணவை முடித்து விட்டு உறங்கச் சென்றால் மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தான் உறக்கத்திலிருந்து விழிப்பதாக தெரிவித்திருக்கிறார். மீண்டும் மாலை 5 மணிக்கு உறங்கச் செல்லும் அவர் இரவு 9:30 மணிக்கு முழிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகத்தான் கடந்த ஐந்து வருடங்களாக நரக வேதனையை அனுபவித்து வருவதாகவும் அந்த புகாரில் தெரிவித்திருக்கிறார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறை இதற்கு எம்மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பாக புலம்பிப் போய் உள்ளனர்.