fbpx

“நான் இனி மேல் குடிக்க மாட்டேன்.. சத்தியமடி தங்கம்… “! ஒரு வருடமாக குடிக்காமல் இருந்ததை போஸ்டர் ஒட்டி கொண்டாடிய சத்திய குடிமகன்!

திருமணநாள், பிறந்தநாள் ஆகியவற்றிற்கு போஸ்டர் ஒட்டி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் முதன்முதலாக ஒரு நபர், தான் மது குடிக்கும் பழக்கத்தை நிறுத்தி ஓராண்டுகள் நிறைவடைந்ததை போஸ்டர் ஒட்டி கொண்டாடிய சம்பவம் இணையதளத்தில் வைரலாகி இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற இந்த சம்பவம், தமிழகத்தில் இன்று பேசு பொருளாகி இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள பக்தவச்சலம் நகர் பகுதியைச் சார்ந்தவர் மனோகரன் 53 வயதான இந்த நபர் கடந்த 32 ஆண்டுகளாக மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்திருக்கிறார். குடிப்பழக்கத்தினால் வாழ்வில் பல்வேறு அவமானங்களை சந்தித்த மனோகரன் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி முதல் குடிக்க மாட்டேன் என சபதம் எடுத்திருக்கிறார். அந்த சபதம் தற்போது ஓராண்டு நிறைவடைந்ததை தனது ஊரெங்கிலும் போஸ்டர் ஒட்டி கோலாகலமாக கொண்டாடி இருக்கிறார் மனோகரன்.

குடிப்பழக்கத்திற்கு மிகவும் அடிமையான மனோகரன் அதனால் வாழ்வில் பல்வேறு அவமானங்களை சந்தித்து இருக்கிறார். மேலும் ஒரு நாளைக்கு 300 முதல் 400 ரூபாய் வரை மதிப்பிற்கு செலவிடுவதால் மிகுந்த பொருளாதார சிக்கலிலும் இருந்திருக்கிறார். இதன் காரணமாக அவர் தனக்கு சொந்தமான நிலத்தை கூட விற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருந்தார். இவர் தினமும் மது குடித்து அதற்கு அடிமையாக இருந்ததால் ஊரில் உள்ள மக்கள் இவரை குடிகாரன் என அவமானப்படுத்தி வந்திருக்கின்றனர். இத்தனை மன உளைச்சலுக்கும் காரணமான இந்த குடியை விட்டு சுயமரியாதையுடன் நிமிர்ந்து வாழ்வேன் என்று கடந்த வருடம் சபதம் எடுத்து அதனை வெற்றிகரமாக தொடர்கிறார் மனோகரன். தற்போது ஊரில் உள்ள மக்கள் அனைவரும் தன்னை மதிப்பதாகவும் தன் உடல் நலமும் சீராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இவர் செங்கல்பட்டில் இன்று ஒட்டிய போஸ்டர்கள் தான் தமிழக அளவில் சமூக வலைதளங்களிலும் மக்களிடமும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

Rupa

Next Post

காலைக் கடனை கழிக்க சென்ற நிதி நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை! நாமக்கல் அருகே பரபரப்பு!

Mon Feb 27 , 2023
நாமக்கல் மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்த 24 வயது இளைஞரை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி என்ற இடத்திற்கு அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி என்ற கிராமத்தைச் சார்ந்த 24 வயது இளைஞர் சசிகுமார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் […]

You May Like