fbpx

“கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன? இந்தா அருவா வெட்டு.”! கணவனின் நண்பனுடன் ஓட்டம்.! நக்கல் பேச்சு பேசிய மனைவி ஓட ஓட வெட்டி கொலை.!

காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவனை விட்டுவிட்டு, அவரது நண்பருடன் ஓட்டம் பிடித்தார் மனைவி. தனது புதிய வாழ்க்கையை பற்றி முன்னாள் கணவரிடம் நக்கலாக பேசிய மனைவி, ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹீனா கவுசர் (19) கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காம் மாவட்டத்தில் உள்ள கொக்கடனூர் பகுதியைச் சேர்ந்தவர். அவர் தெளஃபிக் காடி(24) என்ற இளைஞரை காதலித்து, 4 மாதங்களுக்கு முன் திருமணமும் செய்தார். இவர்களது இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த வேளையில், தனது உயிர் நண்பனான யாசின் பகோட்டியை (21) அடிக்கடி வீட்டிற்கு அழைத்து வரத் தொடங்கினார் தௌஃபிக்.

யாசினின் இன்ஸ்டாகிராம் ரீல்களினால் ஈர்க்கப்பட்ட ஹீனா, செல்போனில் அவரோடு அதிக நேரம் செலவு செய்ய தொடங்கினார். அப்போது யாசினுக்கும் ஹீனாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தௌஃபிக் வீட்டில் இல்லாத சமயத்தில் இருவரும் உல்லாசமாக பொழுதை கழித்துள்ளனர். ஒரு கட்டத்தில் இது தௌஃபிக்கிற்கு தெரிய வரவே, மனைவியை கண்டித்துள்ளார்.

இதனால் கணவனுக்கு தெரியாமல் ஹீனா, கணவனின் நண்பனான யாசினுடன் ஓட்டம் பிடித்து திருமணமும் செய்து கொண்டார். ஜமாத் மூலம் பஞ்சாயத்து செய்தபோது, கணவர் தௌஃபிக்குடன் ஹீனா வர மறுத்துவிட்டார். தன்னுடைய வாழ்க்கை யாசினுடன் தான் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். மனைவி மற்றும் உயிர் நண்பர் இருவரும் செய்த துரோகத்தை எண்ணி வருந்திய தௌஃபிக், தனது மனைவியின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்க விரும்பவில்லை என்று கூறி சென்றுவிட்டார்.

இந்நிலையில் நேற்று அந்த ஊரில் திருவிழா ஒன்று நடந்திருக்கிறது. அதில் ஹீனா தனது முன்னாள் கணவனான தௌஃபிக்கை நேரடியாக சந்திக்க நேர்ந்தது. அப்பொழுது அமைதியாக சென்ற தௌஃபிக்கிடம் ஹீனா, “பாரு உன்னோட ஃப்ரெண்ட் என்னை எவ்வளவு நல்லா வச்சிருக்கான். நான் அவன் கூட ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நல்லவேளை உன்னை பிரிஞ்சு வந்தேன். இல்லனா எனக்கு இந்த சந்தோஷமான வாழ்க்கை கிடைத்து இருக்குமா? நாங்க எவ்வளவு சந்தோஷமா இருக்கோம் தெரியுமா?” என்றெல்லாம் கூறி நக்கலாக பேசியுள்ளார்.

இதனால் கடுப்பாகிப்போன தௌஃபிக் தனது முன்னாள் மனைவி ஹீனாவையும், தனக்கு துரோகம் செய்த யாசினையும் ஓட ஓட விரட்டி, அரிவாளால் வெட்டிக் கொன்றார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தௌஃபிக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Post

"அமலாக்கத் துறைக்கு வேலை வைக்க மாட்டோம்.." அண்ணாமலை கருத்துக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி.!

Sun Feb 4 , 2024
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் அமலாக்கத்துறை குறித்த பேச்சுக்கு தனது வழக்கமான நகைச்சுவையின் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் அமைச்சர் துரைமுருகன். கடந்த சில மாதங்களாக அமலாக்க துறையினர் திமுக அரசின் அமைச்சர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். திமுக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. தற்போது செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக சிறையில் அடைக்கப்பட்டு […]

You May Like