மணப்பாறையில், சாதிய ரீதியாக வந்த தகராறில் பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுவன் மீது, மாற்று சமூகத்தை சேர்ந்தவரின் மகன் சிறுநீர் கழித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மணப்பாறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி, மணப்பாறையில் விடத்திலாம்பட்டியைச் சேர்ந்த பட்டியலினத்தைச் சார்ந்த சிறுவனுக்கும், மாற்று சமூகத்தை சேர்ந்த நபருக்கும், சமூக வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் அந்த சிறுவன் மீது சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த சிறுவன் இதனை தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் மணப்பாறை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். குற்ற செயலில் ஈடுபட்டவர் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்சி எஸ்டி ஆணைய இயக்குனர் பாதிக்கப்பட்டவர்களை அணுகி விசாரணையை மேற்கொண்டு வருகிறார். சாதிய அடக்கு முறையை வெளிப்படுத்திய இந்த சம்பவத்தை அறிந்த அந்தப் பகுதியினர் அதிர்ச்சியுற்றனர்.