சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தனது ஆசை நிறைவேறியதால் 21 ஆண்டுகளுக்கு பிறகு தாடியை ஷேவ் செய்துள்ளார்..
சத்தீஸ்கரில் உள்ள மானேந்திரகரில் ராமசங்கர் குப்தா என்பவர் வசித்து வருகிறார்.. ஆர்டிஐ ஆர்வலரான இவர் மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் (எம்சிபி) மாவட்டத்தை தனி மாவட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 21 ஆண்டுகளாக தாடியை ஷேவ் செய்யாமல் இருந்து வந்துள்ளார்.. இந்த சூழலில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புதிய மாவட்டமாக மானேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் அறிவிக்கப்பட்ட பிறகு 21 ஆண்டுகளுக்குப் பிறகு குப்தா தனது தாடியை ஷேவ் செய்தார்..
எனினும் புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டம் உருவாக ஏறக்குறைய ஒரு வருடம் ஆனதால், குப்தா மீண்டும் ஒரு வருடம் தாடியை ஷேவ் செய்யாமல் தனது தீர்மானத்தைத் தொடர்ந்தார். இந்நிலையில் சத்தீஸ்கர் அரசாங்கம் மாநிலத்தின் 32வது மாவட்டமாக எம்சிபி-ஐ அறிமுகப்படுத்தியதன் மூலம் அவரது கோரிக்கை நிறைவேறியது. இறுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவேறியதால், அவர் தனது தாடியை ஷேவ் செய்து கொண்டார்..
ராமசங்கர் குப்தா இதுகுறித்து பேசிய போது “மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டமாக மாறாத வரை தாடியை ஷேவ் செய்ய மாட்டேன் என்று தீர்மானம் செய்திருந்தேன்… ஆனால் அது புதிய மாவட்டமாக மாறவே இல்லை என்றால் நானும் தாடியை ஷேவ் செய்திருக்க மாட்டேன். இது 40 ஆண்டுகால போராட்டம். மாவட்டத்தின் அங்கீகாரத்திற்காக போராடிய உண்மையான மக்கள் அனைவரும் இறந்துவிட்டனர். இப்போது அவர்களின் ஆன்மா சாந்தியடையும்” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய அவர் “ இதற்காக முதல்வர் பூபேஷ் பாகேலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சத்தீஸ்கரில் மட்டுமின்றி, நாட்டிலேயே முன்மாதிரி மாவட்டமாக மனேந்திரகர் மாறும் என நம்புகிறேன்..” என்று தெரிவித்தார்..
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் கடந்த வெள்ளிக்கிழமை சத்தீஸ்கரின் 32வது மாவட்டமான மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூரைத் தொடங்கி வைத்தார். மாவட்ட தலைமையகம் மனேந்திரகரில் இருக்கும், சிர்மிரியில் உள்ள 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். இந்நிகழ்ச்சியில், புதிய மாவட்டத்தில் ரூ.200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது..