fbpx

பாஜக அடுத்த மூவ்…! இன்று மதியம் மாநில மையக்குழு நிர்வாகிகள் கூட்டம்…! அண்ணாமலையும் பங்கேற்பு…

மத்திய பாஜக அமைப்பு இணை பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் தமிழக பாஜகவின் மாநில மையக்குழு நிர்வாகிகள் கூட்டம் இன்று மதியம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ள உள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில், கடந்த வியாழக்கிழமை தமிழக பாஜகவின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பை ஏற்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை இருக்கக் கூடிய இந்த 7 மாத காலம், அதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பணிகள் அந்த கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த மாநிலத் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், கேசவ விநாயகம் மற்றும் மாநில துணைத் தலைவர்களான கரு.நாகராஜன், கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று மதியம் மத்திய பாஜக அமைப்பு இணை பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் தமிழக பாஜகவின் மாநில மையக்குழு நிர்வாகிகள் கூட்டம் இன்று மதியம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ள உள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. அதேபோல கூட்டணி குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vignesh

Next Post

மகிழ்ச்சி...!அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பேருந்து...! ஆஃப் மூலம் முன்பதிவு எப்பொழுது...? போக்குவரத்து துறை அறிவிப்பு...!

Tue Oct 10 , 2023
மகாளய அமாவாசையை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 14/10/2023 (சனிக்கிழமை) 13/10/2023 மகாளய அமாவாசையை முன்னிட்டு அன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழகத்திலும் மற்றும் அண்டை மாநிலமான பெங்களூரிலிருந்தும் பொது மக்கள் மகாளய அமாவாசை அன்று புண்ணியஸ்தலமான இராமேஸ்வரத்திற்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு […]

You May Like