கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகையாக ரூ. 3,000 வழங்கப்படும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது. பாஜக, காங்கிரஸ் தீவிரமாக தேர்தல் வேலைகளை செய்து வருகிறது.
இந்தநிலையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்; கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ. 3,000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல டிப்ளமோ படித்த இளைஞர்களுக்கு ரூ. 1,500 உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகை படித்து முடித்தப் பின்பு முதல் 2 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும். குறிப்பாக ஒரு வருடத்தில் அரசு வேலை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.