fbpx

சென்னை ஆவடி அருகே மகளின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தாய்…..! தற்கொலைக்கான காரணம் என்ன காவல்துறையினர் தீவிர விசாரணை…..!

ஆவடி அருகே அண்ணனூர் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோதிபாஸ். இவர் மருத்துவப் பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார் இவருடைய மனைவி ரம்யா (37) இந்த தம்பதிகளுக்கு 13 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள்.

ஜோதிபாசுக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம் இந்த நிலையில், ரம்யாவின் மகளுக்கு நேற்று பிறந்த நாள் என்று கூறப்படுகிறது. அதனால் கேக் வெட்டி அந்த விழாவை குடும்பத்தினருடன் ரம்யா கொண்டாடியிருக்கிறார். அதன் பிறகு அவர் தோழி வீட்டிற்கு செல்வதாக தெரிவித்துவிட்டு வெளியே சென்றுள்ளார். வெகு நேரம் ஆன பின்னரும் அவர் வீடு திரும்பவில்லை இதனால் குடும்பத்தினர் ரம்யாவை தேடத் தொடங்கினார். இந்த நிலையில், அண்ணனூர் ரயில் நிலையம் அருகே சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரயில் மோதி இளம் பெண் ஒருவர் உயிரிழந்த தகவல் ஆவடி ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பெயரில் உடனடியாக அந்த பகுதிக்குச் சென்ற ரயில்வே காவல்துறையினர் அந்தப் பெண்ணின் சார்பாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில் மோதி உயிரிழந்த பெண் தொடர்பான விவரங்களை காவல்துறையினர் விசாரித்தபோது, அது ரம்யா என்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, ரம்யாவின் குடும்பத்தினருக்கு காவல்துறையினர் தகவல் கொடுத்தனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரம்யாவின் குடும்பத்தினர் கதறி அழத் தொடங்கினர். அதன் பிறகு பிரேத பரிசோதனைக்கு பின் ரம்யாவின் சடலம் அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ரம்யாவின் இறப்பு தொடர்பாக விசாரித்த போது அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தது தெரிய வந்தது. மகளின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு ரயில் முன் பாய்ந்து ரம்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Post

வெங்கட் பிரபுவின் பதிவால் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது தளபதி 68 பற்றிய அறிவிப்பு..!

Sun Jul 30 , 2023
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் விஜய் நடித்துள்ளார். கவுதம் வாசுதேவ் மேனன், திரிஷா, அஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் லியோ படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு அனிரூத் இசை அமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லியோ படப்பிடிப்பை முடித்து கொண்ட விஜய், தனது ரசிகர்களை […]

You May Like