fbpx

“அம்மாவை விட பெரிய சக்தியில்லை….” காட்டு பன்றியிடம் இருந்து மகளை காக்க தன் உயிரை கொடுத்த தாய்!

தனது 11 வயது மகளை காட்டு பன்றியிடம் இருந்து காப்பாற்ற போராடி தாய் உயிர் நீத்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தின் கொர்பா மாவட்டத்தில் டிலியமர் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் துவசியா பைய் இவருக்கு 11 வயதில் ரிங்கி என்ற மகள் இருக்கிறார். சம்பவம் நடந்த தினத்தன்று தனது மகளை அழைத்துக் கொண்டு தான் வேலை பார்க்கும் தோட்டத்திற்கு சென்று இருக்கிறார் துவசியா. அவர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த காட்டுப்பன்றி அவரது மகள் ரிங்கியை தாக்க முற்பட்டிருக்கிறது. இதனைப் பார்த்து பதறிப் போன துவசியா தனது மகளைக் காக்க மண்வெட்டியுடன் இறங்கி போராடி இருக்கிறார்.

மகளை காட்டுப்பன்றி தாக்காமல் இருக்க அதனுடன் கடுமையாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தனது மகளை அங்கிருந்து ஓடி விடும்படி கூறிவிட்டு காட்டுப்பன்றியை மண்வெட்டியால் தாக்கி இருக்கிறார் துவசியா. காட்டுப்பன்றியும் சீற்றத்துடன் அவரை தாக்கியிருக்கிறது. தப்பிச்சென்ற அவரது மகள் ஊரில் சென்று வன இலாகா அதிகாரிகள் மற்றும் மக்களை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார். அவர்கள் வந்து பார்த்தபோது துவசியா மற்றும் காட்டுப்பன்றி ஆகிய இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர். காட்டுப்பன்றியின் கடுமையான தாக்குதலில் முகம் மற்றும் உடலின் பல்வேறு பாகங்களில் ஏற்பட்ட காயங்களால் துவசியா உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது உடலை உடற் கூராய்விற்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். மகளைக் காக்க காட்டுப்பன்றியுடன் போராடி தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Baskar

Next Post

ஆளில்லாத வீட்டில் இரண்டு வயது பிஞ்சு குழந்தையை கொடூரமாக கொலை செய்த காமுகன் கைது! குஜராத்தை அதிரவைத்த சம்பவம்!

Tue Feb 28 , 2023
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் இரண்டு வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி இருக்கிறது. குஜராத் மாநிலம் சூரத் நகரில் சச்சின் என்ற ஊரில் தான் இந்தச் சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அப்பகுதியைச் சார்ந்த இரண்டு வயது பெண் குழந்தையை ஆளில்லாத வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை […]

You May Like