திருநெல்வேலி மாவட்ட பகுதியில் வெங்கடாச்சலபுரம் மேலத்தெருவில் மகேந்திரன்(30) என்பவர். தன் தந்தையோடு சேர்ந்துகொண்டு பால் வியாபாரம் செய்து வருகின்றார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அதேபகுதியைச் சேர்ந்த பிரவீனா என்கிற பெண்ணோடு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் தம்பதிக்கு ஒன்றரை வயது நிரம்பிய அகிமா என்கிற பெண் குழந்தை இருக்கிறது. நேற்றைய தினத்தில் மகேந்திரன் தன்னுடைய பெற்றோருடன் அருகில் இருந்த தோட்டத்திற்குச் சென்றிருந்தார். அதன் பின்னர் மாலையில் அவர் வீடு திரும்பியுள்ளார்.
பிரவீனா மற்றும் அவரின் ஒன்றரை வயது மகள் அகிமாவும் ஒரே சேலையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து இறந்துள்ளனர். இதனையடுத்து இருவரையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.விசாரணையில், “மகேந்திரன் மற்றும் அவரின் பெற்றோருக்கும் இடையேவும் இதனால் பிரவீனாக்கும் இடையே குடும்பச் சண்டை அதிகளவில் நடந்துள்ளது.
இந்த நிலையில் மிகுந்த மன வேதனையில் வீட்டில் யாரும் இல்லா நேரத்தில் குழந்தையின் கழுத்தில் சேலையைப் போட்டு இறுக்கி, அதே சேலையின் மற்றொரு முனையில் தானும் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.