fbpx

ஜல்லிக்கட்டு நடத்த புதிய மைதானம்..‌.! நாளை திறந்து வைக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின்…!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், கீழக்கரை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாளை திறந்து வைக்க உள்ளார்கள். மேற்படி கீழக்கரை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கத்தில், அரசால் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்தப்படவுள்ளது.

மேற்படி ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் madurai.nic.in இணையதளம் மூலம் தங்களது பெயர்களை பதிவு செய்து இருக்க வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்யும் மாடுபிடி வீரர்கள் உடற் தகுதி சான்றுடனும், காளை உரிமையாளர்கள் காளைகளுக்கு மருத்துவச் சான்றுடனும் பதிவு செய்து இருக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

Vignesh

Next Post

சூடுபிடிக்கும் 2024 களம்...! இன்று கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் கூழு கூட்டம்...!

Tue Jan 23 , 2024
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று பகல் 12 மணிக்கு தேர்தல் அறிக்கை தயாரிப்புக் கூழு கூட்டம் நடைபெற உள்ளது. 2024 மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தின் ஆளும் திமுக அரசு தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் மூன்று குழுக்களை அமைத்தது. தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, […]

You May Like