fbpx

Work From Home.. லட்சத்தில் சம்பளம்..!! டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ணாதீங்க?

பிரபல ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்.

மகாராஷ்டிராவை தலைமையிடமாக கொண்டு FutureSmart AI எனும் சாப்ட்வேர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் என்பது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தான் தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் இன்டன்ஷிப் முறையில் பணிக்கு சேர்ந்து நிரந்தரமாக வேலையை பெற முடியும். இதுகுறித்த முக்கிய விபரங்கள் வருமாறு:

பணியிடங்கள் :

FutureSmart AI நிறுவனத்தில் ப்ரண்ட்எண்ட் டெவலப்பர் (Frontend Developer – React/Next.js) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

என்னென்ன தகுதி ?

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிகிரி முடித்திருக்க வேண்டும். அரியர்ஸ் எதுவும் இருக்கக்கூடாது. மேலும் Frontend-யை பொறுத்தவரை React.js, Next.js,, Tailwind CSS, Mantine Ui, DaisyUI, AntD, React Charts, Reat Markdown உள்ளிட்டவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். Backend & Infrastructure-யை பொறுத்தவரை Nginx, PM2, AWS தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் :

இன்டன்ஷிப்பில் பணியாற்றுவோருக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இன்டன்ஷிப் முடிவடையும் பட்சத்தில் இந்த நிறுவனத்தில் பணியை பெறுவோருக்கு ஆண்டுக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சம்பளம் என்பது வழங்கப்படும்

எப்படி விண்ணப்பிப்பது?

பணிக்கு தேர்வாகும் நபர்கள் Remote முறையில் வேலை செய்யலாம். அதாவது அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணியாற்ற முடியும். தினமும் 8 மணி நேர பணி என்பது இருக்கும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் FutureSmart AI நிறுவனத்தில் இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது குறிப்பிடப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது.

Read more ; என் தந்தை தோனியை திட்டியது ஏன்..? யுவராஜ் சிங் சொன்ன அதிர்ச்சி காரணம்..!!

English Summary

A new job notification has been released from a famous IT company. Candidates can work from home.

Next Post

செந்தில் பாலாஜி வைத்த கோரிக்கை.. மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்!!

Wed Sep 4 , 2024
Ex-minister Senthil Balaji's petition has been dismissed by the Chennai High Court.

You May Like