fbpx

Alert..! வங்கக்கடல் பகுதிகளின் மேல் இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!

வங்கக்கடல் பகுதிகளின் மேல் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அதே பகுதியில் நிலவுகிறது. அதன் தாக்கத்தால் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 2 நாட்களில் மேற்கு திசையில், தமிழகம் – இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும். தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், 11, 12-ம் தேதிகளில் ஒருசில இடங்களிலும்,13, 14, 15-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளிலும், 11-ம் தேதி மேற்கண்ட பகுதிகள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். வரும் 12-ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், 13-ம் தேதி மேற்கண்ட பகுதிகள் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வரும் 14-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 15-ம் தேதி மேற்கண்ட மாவட்டங்கள் (நீலகிரி, கோவை, திருப்பூர் நீங்கலாக) மற்றும் வேலூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

English Summary

A new low pressure area is forming today over the Bay of Bengal

Vignesh

Next Post

பிரபல நடிகர் டெல்லி கணேஷ் உயிரிழப்பு...! சோகத்தில் மூழ்கிய தமிழ் திரையுலகம்...!

Sun Nov 10 , 2024
Famous actor Delhi Ganesh passed away

You May Like