fbpx

#Alert: வங்கக் கடல் பகுதிகளில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…!

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 14-ம் தேதி வாக்கில் உருவாகக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை மறுநாள் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வரும் 16,16,18 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி...!

Mon Nov 13 , 2023
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரிந்த போது 11.07.2016 முதல் 31.10.2023 வரை இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களில் கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு கோரிய விண்ணப்பங்கள் உடனடியாக முதன்மைக் கல்வி அலுவலரின் நிருவாகத்திற்குட்பட்ட பள்ளிகள் / மாவட்டக் கல்வி அலுவலகம் / வட்டார கல்வி அலுவலகங்கள் ஆகியவற்றிலிருந்து பார்வை 1 மற்றும் 3-ல் காண் அரசாணையின்படி தொகுதி “C” பணியிடங்களுக்கான நியமன அலுவலர் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் […]

You May Like