fbpx

ராகுல் காந்திக்கு அடுத்த நோட்டீஸ்…! ஏப்ரல் 22-ம் தேதிக்குள் அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டும்…!

டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த பரப்புரைக் கூட்டத்தின் போது பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்து மோடி சமூகத்தினரை கொச்சைப்படுத்தும் விதமாக இருப்பதாக கூறி அவர் மீது குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் மார்ச் 23-ம் தேதி தேதி தீர்ப்பு வழங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதோடு மேல் முறையீடு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டு, ஜாமீனும் வழங்கப்பட்டது.

இந்த உத்தரவை தொடர்ந்து ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் டெல்லியின் துக்ளக் சாலையில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்ய அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 22-ம் தேதிக்குள் காலி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மக்களே உஷார்...! தமிழகத்தில் இன்று மழை...! வானிலை மையம் தகவல்...!

Tue Mar 28 , 2023
தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான […]
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை..!! எங்கெங்கு தெரியுமா..? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

You May Like