fbpx

#Leave: தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…! ஆட்சியர் அறிவிப்பு…!

தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவை மாவட்டத்தின் வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்யும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாணவர்களின் நலன் கருதி இன்று 2 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு, விடுமுறை வழங்கபட்டுள்ளது. இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவை மாவட்டத்தின் வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை வழங்கபடுகிறது என ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார். அதே போல கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று  அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

Also Read: தொடர்ச்சியாக நடைபெறும் தேர் விபத்து.. திமுக அரசை கடுமையாக சாடிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…!

Vignesh

Next Post

மக்களை கவனம்... ஆவின்‌ பால்‌ தரம் குறைவா...? உடனே இந்த இலவச தொலைபேசி எண் மூலம் புகார் அளிக்கலாம்...! அரசு அறிவிப்பு

Tue Aug 2 , 2022
நுகர்வோர்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் புகார் அளிக்கலாம் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு பால்‌ உற்பத்தியாளர்கள்‌ கூட்டுறவு இணையத்தின்‌ கட்டுப்பாட்டில்‌ இயங்கும்‌ மாதவரம்‌, அம்பத்தூர்‌, சோழிங்கநல்லூர்‌ ஆகிய மூன்று பால்‌ பண்ணைகளின்‌ வாயிலாக சமன்படுத்தபட்ட பால்‌ , நிலைப்படுத்தப்பட்ட பால்‌, கொழுப்புசத்து நிறைந்த பால்‌ , இருமுறை சமன்படுத்தப்பட்ட பால்‌ ‌ என்ற வகைகளில்‌ […]

You May Like