விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள காடுவெட்டி கிராமத்தில் மின்சார துறையில் லைன் மேன் பழனி மற்றும் மகன் ராஜகுரு வசித்து வந்துள்ளனர்.
ரத்தப் புற்றுநோய் காரணமாக மகன் சென்ற ஆண்டு உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி ராஜ குருவின் தோழர்கள் மற்றும் கிராம மக்கள் 40 கும் மேற்பட்டோர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த சேகரிப்பு மையத்தில் ரத்ததானம் அளித்துள்ளனர்.
இறந்தவரை அடுத்த நாளே மறக்கும் காலகட்டத்தில் நண்பரின் நினைவு நாளை முன்னிட்டு மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும் வகையில் ரத்த தானம் செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் அவரது நண்பர்கள் மட்டும் அல்லாமல் கிராமத்தைச் சேர்ந்தவர்களும் வந்து ரத்த தானம் அளித்தது குறிப்பிடத்தக்கது.