fbpx

நியாயம் கேட்கும் குடிமகன்! மதுபான கடையில் ரசீது கேட்டு ரகளை!

திருப்பூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடையில்  குடிமகன் ஒருவர் ரசீது கேட்டு ரகளையில் ஈடுபட்டதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியதால் வைரலாகியுள்ளது.

அரசாங்கம் நிர்ணயித்த விலையை விட கூடுதலான விலைக்கு மதுவை விற்பனை செய்வதாக குற்றஞ்சாட்டி அந்த நபர் தனக்கு ரசீது வழங்காவிட்டால் டாஸ்மாக் மேலாளரை கடையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க மாட்டேன் என மிரட்டும் தோனியில் பேசியிருக்கிறார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேலம்பாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடையில் இன்று டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சிவக்கொழுந்து மேற்பார்வையில் ஈடுபட்டிருந்தார். அப்போது நிறைய பேர் மது வாங்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த கூட்டத்தில் ஒருவர் தான் வாங்கிய மது பாட்டில்களுக்கு ரசீது வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

இதனை அங்கு மது அருந்த வந்த நபர்களில் யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி விட்டனர். நெட்டிசன்கள் மதுக்கடையில் நியாயம் கேட்கும் குடிமகன் என்று அந்த வீடியோவை வைரல் செய்து வருகின்றனர்.

Baskar

Next Post

விஜயகாந்தின் திருமணநாளுக்கு நேரில் சென்று சர்ப்ரைஸ் கொடுத்த எஸ்.ஏ. சந்திரசேகர்.!

Tue Jan 31 , 2023
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக விளங்கியவர் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் கேப்டன் பிரபாகரன் வாஞ்சிநாதன் சொக்கத்தங்கம் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர். சினிமாவில் இருக்கும் போதே அரசியலிலும் களம் பதித்த இவர் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற கட்சியினை ஆரம்பித்தார். தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். ஆரோக்கியமாக சினிமாவிலும் அரசியலிலும் ஈடுபட்டு வந்த இவர் சில காலமாக தைராய்டு பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்தது நாம் அறிந்ததே. […]

You May Like