fbpx

ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த நபர் உத்தரப்பிரதேசத்தில் கைது.. போலீசார் தீவிர விசாரணை..

கேரளாவில் ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த நபர் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்..

கடந்த 3-ம் தேதி இரவு ஆலப்புழா – கண்ணூர் விரைவு ரயிலில் மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். தீயை கண்டதும் ஓடும் ரயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண், ஒரு ஆண் என 3 பேர் உயிரிழந்தனர். 9 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.. அப்போது ரயிலில் இருந்தவர்கள் கத்தி கூச்சலிட அதில் ஒரு பயணி அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினார். அந்த நேரத்தில் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து கேரள காவல்துறை, ரயில்வே காவல்துறை, தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே கேரள ரயிலில் தீ வைத்த நபருடையது என சந்தேகிக்கப்படும் பை ஒன்றை கைப்பற்றி காவல்துறை சோதனை செய்தனர்.. அந்த பையில் இருந்த டைரியில் ஹிந்தி, ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள குறிப்புகள் கிடைத்தது.. அதில், கன்னியாகுமரி, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்ததால் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

மாவோயிஸ்டுகள் செயலா அல்லது பயங்கரவாதிகளின் சதியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.. இதை தொடர்ந்து போலீசார் குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் நபரின் வரைபடத்தை வெளியிட்ட போலீசார் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தினர்..

இந்த விசாரணையில், ஷாருக் சைபி என்பவர் இந்த ரயிலில் பயணம் செய்ததும், அவர் தான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்றும் தெரியவந்தது.. இதைதொடர்ந்து
கேரள புலனாய்வு குழுவினர் குற்றவாளியை பிடிக்க நொய்டா சென்றிருந்தனர்..

இந்நிலையில் ஷாருக் சைபி என்ற நபரை உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.. உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் அந்த நபர் பதுங்கி இருந்த நிலையில் அவரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.. உத்தரப்பிரதேச போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் கிடைக்கும் தகவல்கள் தேசிய புலனாய்வு முகமை மற்றும் கேரள போலீசாரிடம் பகிர்ந்து கொள்ளப்படும்.. இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என்பது விசாரணைக்கு பின்னர் தெரியவரும்..

Maha

Next Post

வாட்டி வதைக்கும் வெயில்..!! உடல் சூடு உடனே குறைய சாப்பிட வேண்டிய 10 உணவுகள்..!!

Tue Apr 4 , 2023
வெயில் காலம் வேகம் எடுக்க தொடங்கியதை அடுத்து பலரையும் உடல் சூடு பிரச்சனை வாட்டி வதைத்து வருகிறது. அதிகரிக்கும் உடல் வெப்பநிலையால் உடல் சோர்வு, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, அதிக வியர்வை, சிறுநீர் பாதையில் எரிச்சல் மற்றும் சருமத்தில் கொப்புளங்கள் ஆகிய பல உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இது போன்ற சிக்கல்களை தவிர்க்க உடல் வெப்பத்தை சமநிலைக்கு கொண்டு வரும் உணவு வகைகளை பற்றி இந்தப் பதிவில் […]

You May Like