தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெறக் கோரி குடியரசுத் தலைவர் முர்முவிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
திமுக தலைமையிலான மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குறிய வகையில் பேசி வருவதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.
மேலும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நீண்ட காலமாக நிலுவையில் வைத்துள்ளார் என்று தொடர்ந்து ஆளுநர் மீதான புகார்களை அடுக்கி வருகின்றனர். அது தொடர்ச்சியாக தான் தற்போது அவரை திரும்ப பெற வேண்டுமென்று மனுவை குடியரசுத் தலைவரிடம் ஒப்படைத்துள்ளனர்.