ஆணாதிக்க நாடான வடகொரியாவில் கிம் ஜாங் உன் முதல் முறையாக தனது மகளுடன் கையை கோர்த்து நடந்தபடி போட்டோ வெளியாகியுள்ளது.
வடகொரியா கட்டுப்பாடுகள் அதிகமாக கொண்ட ஒரு நாடு. இந்நாட்டை ஆட்சி செய்து வருபவர் கிம் ஜாங் உன். இவர் அடக்குமுறை ஆட்சி செய்துவருவது அனைவரும் அறிந்த ஒன்று. மேலும் இது நாள் வரையில் தன் மனைவியைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ குடும்பத்தை பற்றியோ எந்த தகவலையும் வெளியிட்டதில்லை.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தன் மகளுடன் கைகோர்த்து நடந்தபடி செல்லும் கிங் ஜாங் உன் முதல் முறையாக தனக்கு மகள் இருக்கின்றாள் என்ற தகவலை மறைமுகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவில் 1948 முதல் கிம் வம்சத்தினர் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர்.
இதுவரை தன் குடும்பத்தினர் பற்றி வெளியில் கூறிக்கொள்ளாத நிலையில் முதன் முறையாக மகளுடன் உள்ள படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், தனக்கு எத்தனை குழந்தைகள் உள்ளன என்பது பற்றிய விவரத்தையோ, மகளின் பெயரையோ இதுவரை வெளியில் சொன்னது கிடையாது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஏவுகணை சோதனை நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்டார். எவ்வாறு ஏவுகணையை இயக்குவது என்பது பற்றி அறிந்துகொண்டார். இதுதான் முதன் முதலில் அவருக்கு வாரிசு இருப்பதை உறுதி செய்துள்ள புகைப்படமாக கருதப்படுகின்றது.
மேலும், இவர் வெற்றியாளரா இல்லை ஒரு குறியீடா என்று உறுதியளிக்கப்படும் தலைமுறை தலைமுறையினராக நம் சந்ததியினருக்கு அளிக்கப்பட வேண்டியவை என மீடியாக்களின் தகவல் வெளியானது. வடகொரியாவில் பெண் தலைவர்கள் பற்றிய புத்தகத்தில் கிம் தனது மகளை ஆட்சியாளராக அறிவிக்கும் வாய்ப்பு பூஜ்யம் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், பிற பாலினத்தவரை வரவேற்கும் நிலை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு அன்பான தந்தையே தவிர ஏவுகணைகளை சுடும் ஒரு மிருகத்தனம் நிறைந்த சர்வாதிகாரி இல்லை என்பதையும் அதில் விளக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 40 வயதாகும் கிம் அவர் இயலாமை அல்லது மரணத்திற்கு வழி வகுக்கும் உடல் நலப் பிரச்சனை உள்ளதால் அவர் வேறொரு வாரிசை தலைவராக்க முற்பட வேண்டும் எனவும் பல தரப்புகளில் பேசப்பட்டு வருகின்றது.
மேலும் வடகொரியாவில் அரசியல் காலாச்சாரத்தை மாற்றவும் மற்றும் புதிய விதிமுறைகையிட்டு பெண் வெற்றியாளர்களை தேர்வு செய்யும நேரம் வந்துவிட்டது எனவும் வடகொரிய இயக்குனர் மிஷேல் மேடன் தெரிவித்துள்ளது. கிம் அவரைச் சுற்றி பல சக்தி வாய்ந்த பெண்களை வைத்துள்ளதாகவும் அவரது சோகதரி யோ ஜோங் மற்றும் சூ சோன் ஹய் ஆகியோரும் கூட உள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டிஉள்ளார்.