fbpx

சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து…..! திடீரென்று குறுக்கே வந்து இருசக்கர வாகனம் பற்றி எரிந்த பேருந்து காவலருக்கு ஏற்பட்ட பரிதாபம்…..!

இருசக்கர வாகனமோ அல்லது நான்கு சக்கர வாகனமோ எந்த வாகனமாக இருந்தாலும், வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக செயல்படுவது மிகவும் அவசியம். அப்படி கவனமாக செயல்பட்டாலும் கூட பல நேரங்களில் இந்த வாகனங்களால் ஆபத்து ஏற்படுகிறது.

இருசக்கர வாகனத்திலும் சரி, நான்கு சக்கர வாகனத்திலும் சரி தற்போது தீப்பிடிப்பது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கம்பம் ட்ராவல்ஸ் என்ற ஆம்னி பேருந்து தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உத்தமபாளையம் அருகே சென்று கொண்டிருந்தது.

அந்த சமயத்தில், சின்னமனூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்த ராமகிருஷ்ணன் என்பவர் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது உத்தமபாளையம் பகுதிக்கு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த சமயத்தில், அவருடைய இருசக்கர வாகனம் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கம்பம் டிராவல்ஸ் என்ற ஆம்னி பேருந்து மீது பயங்கரமாக மோதியது.

அடுத்த ஒரு சில நிமிடங்களில் அந்த பேருந்தில் திடீரென்று தீப்பற்றிக் கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள், அலறியடித்து ஓட தொடங்கினர். நடந்த சம்பவத்தால் சுதாரித்துக் கொண்ட அந்த பேருந்தின் ஓட்டுனர், அந்த பேருந்தில் இருந்த பயணிகள் எல்லோரையும் விரைவாக பேருந்தில் இருந்து இறக்கி விட்டார். இந்த நிலையில், பயணிகள் அலறி அடித்துக் கொண்டு பேருந்து விட்டு அவசர அவசரமாக இறங்கி ஓட தொடங்கினர்.

அவர்கள் இறங்கிச் சென்ற சற்று நேரத்தில் அந்த ஆம்னி பேருந்து முழுவதும் தீக்கிரையானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த யாருக்கும் எந்த விதமான உயிர் சேதமோ அல்லது உடல் சேதமோ ஏற்படவில்லை. அதே நேரம், இருசக்கர வாகனத்தில் வந்து பேருந்தின் மீது மோதிய காவலர் ராமகிருஷ்ணன் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், அவரால் எழுந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக, பேருந்தில் பற்றிய தீயில் காவலர் ராமகிருஷ்ணனும் கருவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். எதிர்பாராத விதமாக நடைபெற்ற இந்த விபத்தின் காரணமாக, தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.. பேருந்தில் வந்த பயணிகள் எல்லோரும் மாற்று வாகனங்கள் மூலமாக தங்களுடைய வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். பேருந்து விபத்தில் காவலர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் வரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

மகிழ்ச்சி செய்தி...! LPG சிலிண்டர் விலை ரூ.99.75 அதிரடியாக குறைப்பு...!

Tue Aug 1 , 2023
வணிக ரீதியான எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ.99.75 குறைக்கப்பட்டுள்ளது. எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் வணிக ரீதியான எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைத்துள்ளன. புதிய உத்தரவின்படி, 19 கிலோ வணிக எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ.99.75 குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை இன்று முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று முதல் 19 கிலோ வர்த்தக எல்பிஜி சிலிண்டரின் சில்லறை விற்பனை விலை ரூ.1,680 […]

You May Like