ஜப்பானின் கியூஷு பகுதியில் இன்று மாலை 7.34மணியளவில் 6.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய பூகம்ப அறிவியல் மையத்தின் தகவலை படி, இன்று (ஏப்ரல் 2, 2025) ஜப்பானின் கியூஷுவில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியதால், அவர்கள் தங்கள் வீடுகள் மற்றும் கட்டிடங்களை விட்டு வெளியேறினர்.
நிலநடுக்கத்தின் மையம் கியூஷுவின் தெற்குப் பகுதியில் இருந்தது, கியூஷுவில் இருந்த மக்கள் பல வினாடிகள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்தனர். ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனத்தின்படி, நிலநடுக்கத்திற்குப் பிறகு எந்த சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. மேலும் இந்த நிலநடுக்கம் காரணாமாக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த எந்த தகவலும் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை.
EQ of M: 6.0, On: 02/04/2025 19:34:00 IST, Lat: 31.09 N, Long: 131.47 E, Depth: 30 Km, Location: Kyushu, Japan.
— National Center for Seismology (@NCS_Earthquake) April 2, 2025
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjcVGs @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/FmxYcrJlHW
AFP செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஜப்பானின் “நான்கை பள்ளத்தாக்கில்” நீண்டகாலமாக அஞ்சப்படும் ஒரு “பெரிய நிலநடுக்கம்” (MEGA EARTHQUAKE) பேரழிவை ஏற்படுத்தும் சுனாமிகளை உருவாக்கி 300,000 மக்களைக் கொல்லக்கூடும் என்று ஜப்பானிய அரசாங்கத்தின் புதிதாக வெளியிடப்பட்ட அறிக்கை எச்சரிக்கிறது.
ஜப்பான் பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும். நில அதிர்வு செயலில் உள்ள மண்டலத்தில் அமைந்துள்ளது. ஜப்பான் ஒவ்வொரு 100 முதல் 150 ஆண்டுகளுக்கும் பெரிய நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றன. நான்கு பெரிய டெக்டோனிக் தகடுகளுக்கு மேல் அமைந்துள்ள ஜப்பான், உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த பகுதிகளில் ஒன்றாக உள்ளது, இது அத்தகைய அழிவுகரமான நிகழ்வுகளுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக ஆக்குகிறது.
கடந்த வாரம், மியான்மர் மற்றும் தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் பேரழிவை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. பாங்காக்கில் கட்டுமானத்தில் இருந்த பல மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது, அதே நேரத்தில் மியான்மரில் மில்லியன் கணக்கான மக்கள் வீடற்ற நிலையில் தஞ்சம் அடைய முயன்றனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இறப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் மியான்மரில் இன்று மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டது. மியான்மரில் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவாகி உள்ளது.
Read More: மீண்டும் மீண்டும் நிலநடுக்கம்.. திணறும் மியான்மர்.. ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு..!!