fbpx

“நீ எல்லாம் பாட்டு கேட்க கூடாது”! என்று தலித் இளைஞர்களுடன் பிரச்சனை! 108 அம்புலன்ஸை வழி மறித்து அடிதடி!

கடலூர் அருகே காயங்களுடன் ஆம்புலன்ஸில் சென்ற தலித் இளைஞர்களை மற்ற சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் கூட்டாக சென்று தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் வாஞ்சிநாதன் அவர்களின் கருத்துப்படி கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுகாவில் உள்ள சாத்தப்பாடி கிராமத்தில் தலித் சமூக மக்கள் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். நேற்று மாசிமகத்தையொட்டி அப்பகுதியில் உள்ள கோவில்களில் திருவிழா நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சாமியை டிராக்டரில் வைத்து பிச்சாவரம் வரை கொண்டு சென்று வழிபட்டு விட்டு பின்னர் ஊருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அப்போது அந்த டிராக்டரில் வந்த தலித் இளைஞர்கள் தங்களுக்கு விருப்பமான பாடலை ஒலிக்கச் செய்து வந்திருக்கின்றனர். டிராக்டர் மேலும் கிராமத்தில் வரும்போது மாற்று சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் இந்தப் பாடலை ஒலிக்க கூடாது என கூறியுள்ளனர். ஆனால் தலித் இளைஞர்கள் விடாப்பிடியாக இந்த பாடலை தான் ஒலிக்க செய்ய வேண்டும் என ஒலிக்கச் செய்திருக்கின்றனர். இந்தப் பிரச்சனை அடிதடியாக மாறியிருக்கிறது. ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பலமான காயங்கள் ஏற்படவே அவர்களது பெற்றோர்கள் 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் கொடுத்து தங்களது பிள்ளைகளை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மாற்று சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் தங்கள் கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு தகவல்களை கொடுத்து அவர்களும் வந்து 108 ஆம்புலன்ஸை மறித்து அதிலிருந்த காயம் பட்ட தலித் இளைஞர்களையும் அவர்களது பெற்றோர்களையும் ஆம்புலன்ஸ் ஊழியர்களையும் தாக்கியிருக்கின்றனர். தாக்குதல் நடத்தி விட்டு புவனகிரி அரசு மருத்துவமனை அருகே அந்த இளைஞர்களையும் அவர்களது பெற்றோர்களையும் வீசி விட்டு சென்றுள்ளனர். தலித் இளைஞர்களுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது காவல்துறை விசாரணை செய்து வருகிறது.

Rupa

Next Post

திருச்சி அதிமுக நிர்வாகி ஓட ஓட விரட்டி படுகொலை! தனிப்படை அமைத்து காவல்துறை தீவிர விசாரணை!

Wed Mar 8 , 2023
திருச்சி அருகே அதிமுக நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அமைதிக்கு பெயர் போன திருச்சியில் அவ்வப்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை ஈச்சங்காடு பகுதியைச் சார்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் இவரது மகன் கோபி வயது 32. இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிர்வாகியாக இருந்தார். இந்நிலையில் நேற்று […]

You May Like