fbpx

“நெஞ்சே பதறுதே..” பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம்..!! 20 நாள் குழந்தையை புதரில் வீசிய கொடூர தந்தை..!!

மத்திய பிரதேச மாநிலத்தில், பிறந்து 20 நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தையை புதரில் தூக்கி எறிந்து சென்றுள்ளார் அந்த குழந்தையின் தந்தை. ஆண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டு இருந்தபோது, பெண் குழந்தை பிறந்ததால் இவ்வாறு செய்ததாக அவர் காவல் துறையினரிடம் தெரிவித்தார். அந்த பச்சிளம் குழந்தையை கைப்பற்றி பெற்ற தாயிடம் ஒப்படைத்த காவல்துறையினர், அந்த தந்தையின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில், ரோஹித் யாதவ் (30) கணினி ஆபரேட்டராக பணிபுரிகிறார். கடந்த வியாழக்கிழமை அன்று, அவர் 20 நாட்களுக்கு முன்பு பிறந்த தனது பெண் குழந்தையை, இந்தூர்-உஜ்ஜைன் சாலையில் உள்ள புதர் ஒன்றில் வீசிவிட்டு சென்று இருக்கிறார். வீட்டில் குழந்தையைக் காணாது திகைத்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள், காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

அவர்கள் அளித்த புகாரின் பேரில் ரோஹித் யாதவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது தனக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும், இம்முறை ஆண் குழந்தை வேண்டும் என்று விரும்பியதாகவும் கூறினார். இந்த முறையும் பெண் குழந்தையை பிறந்ததால், குழந்தையை புதரில் வீசியதாகவும் தெரிவித்தார். அதிர்ச்சியுற்ற காவல்துறையினர், அந்த குழந்தையை மீட்டு, அதன் அன்னையிடம் ஒப்படைத்தனர்.

ஹிரா நகர காவல் நிலைய அதிகாரி பி.எல்.ஷர்மா கூறுகையில், குற்ற செயலில் ஈடுபட்ட குழந்தையின் தந்தை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஆயினும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. பிறந்து 20 நாட்களே ஆன, பச்சிளம் குழந்தைக்கு நடந்த இந்த அக்கிரமத்தை அந்தப் பகுதியினர் வன்மையாக கண்டித்தனர்.

Next Post

'35 அமைச்சர்களில் 15 பேர் ஊழல்’..!! ’துப்பில்லாத திராவிட மாடல் அரசு’..!! திமுகவை கடுமையாக சாடிய அண்ணாமலை..!!

Fri Feb 9 , 2024
“என் மண், என் மக்கள் ” என்ற தலைப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நேற்று ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பாஜக நிர்வாகிகளுடன் அண்ணாமலை பாதயாத்திரை தொடங்கினார். இதைத்தொடர்ந்து, நடைபயணத்தின் போது பொதுமக்களிடம் பேசிய அண்ணாமலை, ”தொழில் நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக ஸ்ரீபெரும்புதூர் பகுதி அமைந்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரத்தில் தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கு ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்கள் 30% வரை தொழில் நிறுவனங்களிடம் […]

You May Like