fbpx

சிறு பிழைக்கு ஆவணதாரர்களை அலைக்கழிக்க கூடாது…! பதிவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு…!

சப் ரிஜிஸ்டர் அலுவலகங்களில் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் தொடர்பான தகவல்களை உரிய ஆவணதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அனைத்து சார்பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்; ஆவணப்பதிவு தொடர்பாக பதிவு அலுவலகத்திற்கு வரும் ஆவணதாரர்களால் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் ஆவணங்களில் காணப்படும் சிறு பிழைகள் தொடர்பாக உரிய காரணங்களின்றி அலைக்கழிக்கப்படுவதாகவும், அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக சார்பதிவாளர்களால் பிற அலுவலர்களுக்கு மற்றும் பிற சார்பதிவகங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் கடித போக்குவரத்து ஆவணதாரர்களாகிய அவர்களுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்கப்படுவதில்லை எனவும் பதிவுத்துறை தலைவரின் கவனத்திற்கு வரப்பெற்றுள்ளது.

ஒரு நேர்வில் வங்கி ஒன்றால் உரியவாறு எழுதப்பட்ட விற்பனைச் சான்றாவணம் (Sale Certificate) 2 கோர்வையின் பொருட்டு ஒரு சார்பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அச்சார்பதிவாளர் அந்த ஆவணத்தில் கண்டுள்ள சொத்தானது தமது அலுவலக வரம்பிற்கு உட்பட்டதன்று என பிறிதொரு சார்பதிவகத்திற்கு அனுப்பிவைத்துள்ளார். இது குறித்து தொடர்புடைய வங்கிக்கோ, ஆவணதாரர்களுக்கோ எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் நீதிமன்றம் வரை செல்ல நேர்ந்து ஆவணதாரர் அவதியுற்றதாக சென்னை உயர்நீதிமன்றம் தனது கண்டனத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்துள்ளது.

இவ்வாறான நேர்வுகளை இனிவரும் காலங்களில் அறவே நிகழாவாறு சார்பதிவாளர்கள் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் குறித்த நிலையினை ஆவணதாரர்களுக்கு உரியவாறு தெரிவித்திடல் வேண்டுமென்றும் ஆவணதாரர்களால் உடனுக்குடன் சரிசெய்யத்தக்க சிறு பிழைகளுக்காக எக்காரணம் கொண்டும் ஆவணதாரர்களை அலைக்கழிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

’ஐயோ என் மானம் போச்சு’..!! இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த பாஜக நிர்வாகி..!! குமரியில் அதிர்ச்சி..!!

Sat May 11 , 2024
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் விமலன் (45). இவர், தோவாளை கிழக்கு ஒன்றிய பாஜக சிறுபான்மை பிரிவு நிர்வாகியாக இருக்கிறார். இந்நிலையில், சம்பவத்தன்று இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், வீட்டில் குளித்துக் கொண்டிருந்ததை ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண், கத்தி கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு இளம்பெண்ணின் கணவர் மற்றும் வீட்டில் இருந்தவர்கள் […]

You May Like