fbpx

மைதானத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு … கிரிக்கெட் போட்டி இடைநிறுத்தம்…

கவுகாத்தியில் நடைபெறும் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளிடையேயான போட்டியில் 2-வது டி20 போட்டி நடைபெற்றபோது பாம்பு மைதானத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கவுகாத்தியில் 2-வது டி20 போட்டி தொடங்கியபோது திடீனெ பாம்பு புகுந்தது. இதனால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. முதலில் தென்னாப்பிரிக்கா பந்து வீசத் தொடங்கியது. ரோகித் மற்றும் கே.எல் ராகுல் அதிரடியாக விளையாடினர். 7வது ஓவர் விளையாட்டின்போது கே.எல் ராகுல் ஏதோ வருகின்றது என அறிந்து தென்னாப்பிரிக்க வீரர்களைஅங்கிருந்த போக சொன்னார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக நடுவர்கள் மற்றும் ஊழியர்களை வரவைத்தனர். பாம்பை பிடிக்க ஊழியர்கள் வந்ததை அடுத்து பாம்பை ஒரு வாலியில் போட்டு கொண்டு சென்றனர்.

வாழ்க்கையில் இப்போதுதான் நாம் பாம்பைக் கண்டு படை நடுங்கியதை பார்த்திருப்போம். விளையாட்டின்போது வந்த பாம்பு இரண்டு படைகளை நடுங்க வைத்துவிட்டது. கிரிக்கெட் மைதானத்திற்குள் பாம்பு வந்து இதுவரை பார்த்ததில்லை என வீரர்கள் டுவீட் செய்தள்ளனர். இப்போதுதான் களத்தில் பாம்பு பார்த்ததாகவும் ரசிர்களின் பாதுகாப்புக்கு இதுஅச்சுறுத்தல் எனவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பாம்பை பிடித்ததும் மீண்டும் போட்டிகள் தொடங்கி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் குவித்து 238 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. கே.என் ராகுல் 28 பந்துகளில் 57 ரன்களும் , ரோகித் சர்மா 43 ரன்களும் , சூரியகுமார் யாதவ் 22 பந்துகளில் 61 ரன்களும் குவித்தனர். இதில் 5 சிக்சர்கள், 5 பவுண்டரிகளும் அடங்கும். விராட்கோலி 49 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார். தினேஷ் கார்த்திக் 17 ரன்கள் எடுத்தார்.  

Next Post

தென் ஆப்பிரிக்கா – இந்தியா மோதும் ஒரு நாள் போட்டி.. இந்திய அணி மாற்றம்!!

Sun Oct 2 , 2022
  இந்தியாவில் தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடர் முடிந்து ஒரு நாள் போட்டிகளை விளையாட உள்ளன. இதில்இந்திய அணியில் சில மாற்றங்களை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. இந்தியாவில் டி.20 தொடரில் தென்னாப்பிரிக்கா விளையாடி வருகின்றது. இதைத் தொடர்ந்து வரும் 6ம் தேதி ஒரு நாள் போட்டிகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்தி அணி விவரங்களை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது. டி.20 தொடரில் விளையாடும் நபர்கள் […]

You May Like