fbpx

அண்ணன், தம்பியை சேர்த்து வைக்கும் மகன்..!! முக.அழகிரி உடனான சந்திப்பின் பின்னணி இதுதான்..!!

மீண்டும் திமுகவில் இணைவது குறித்து தலைமை தான் முடிவெடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை தொடங்கி வைப்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமானம் மூலம் நேற்று மதுரைக்கு வந்தார். இதையடுத்து, தனியார் ஹோட்டலுக்குச் சென்ற அமைச்சர் உதயநிதி, சற்று நேரத்தில் கிளம்பி டிவிஎஸ் நகரில் உள்ள தனது பெரியப்பாவான முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை நேரில் சந்தித்தார். வீட்டிற்குள் நுழையும் முன்பே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, மு.க.அழகிரி வரவேற்க உதயநிதி ஸ்டாலின் அழகிரியின் காலில் விழுந்து ஆசி பெற்றார். இதையடுத்து, உதயநிதி ஸ்டாலினும் அழகரியும் மாறி மாறி பொன்னாடை போர்த்திக் கொண்டனர். இந்த சத்திப்பின் போது அமைச்சர் அன்பில் மகேஷ், எம்எல்ஏ தளபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அண்ணன், தம்பியை சேர்த்து வைக்கும் மகன்..!! முக.அழகிரி உடனான சந்திப்பின் பின்னணி இதுதான்..!!

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி, அமைச்சராக பதவியேற்ற பின் எனது ”பெரியப்பாவை சந்தித்து வாழ்த்து பெற வந்தேன். எனது பெரியப்பாவும் பெரியம்மாவும் ஆசிர்வதித்தனர். இருவரும் மனநிறைவோடு வாழ்த்தினர்” என்றார். தொடர்ந்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, ”தம்பி மகன் என்ற முறையில் எங்களிடம் ஆசி பெற உதயநிதி வந்திருந்தார். அமைச்சர் அன்பில் மகேஷும் எனக்கு இன்னொரு மகன் தான். அவருக்கும் ஆசி வழங்கி வாழ்த்து தெரிவித்தேன். நான் திருநகரில் உள்ள வீட்டில் இருந்த போது என் குழந்தைகளுடன் விளையாடியவர்கள் இன்று அமைச்சர்களாக உள்ளார்கள் என்பது எல்லை இல்லா மகிழ்ச்சியாக உள்ளது. அதைவிட சந்தோசம் தம்பி முதல்வராக உள்ளார் மகன் அமைச்சராகியுள்ளார் என்றார். தொடர்ந்து, திமுகவில் இணைவது குறித்த கேள்விக்கு பதிலளித்த முக.அழகிரி, அதை தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.

Chella

Next Post

கொடுத்த கடனை கேட்டதால் விபரீதம்….! கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்ட கொடூரம்…..!

Tue Jan 17 , 2023
ஒருவருக்கு கஷ்டம் என்று வந்துவிட்டால் அவருக்கு பணம் கொடுத்து உதவுவது ஒரு விதமான மனிதப் பண்பு. அப்படி நம்மிடம் பணம் வாங்குபவர்கள் நாணயமான முறையில் அந்த பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். ஆனால் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடிக்கும் நபர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆபத்தில் உதவுபவனே சிறந்த நண்பன் என்று சொல்வார்கள். ஆனால் ஆபத்திற்கு பாவமில்லை என்ற உதவி செய்த நபர்களையே பழி தீர்க்கும் கும்பலும் இன்னும் […]

You May Like