fbpx

தமிழகம் முழுவதும் 23 & 24 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்…! மிஸ் பண்ணிடாதீங்க

தமிழகம் முழுவதும் நாளை மற்றும் நாளை மறுநாள் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி 29.10.2024 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 29.10.2024 முதல் 28.11.2024 வரை புதிய வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் செய்வது தொடர்பாக சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது.

எனவே, இந்த வாக்காளர் பட்டியல் திருத்த காலத்தில், 23.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 24.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்கள் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அந்நாட்களில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை அந்தந்த வாக்குசாவடி மையங்களில் பொதுமக்கள் அளிக்கலாம். மேலும், போதுமான அளவு விண்ணப்பங்கள் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் இருப்பு வைத்து வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே 18 வயது பூர்த்திடைந்த அனைவரும் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர்களாக அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் அல்லது வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு உடனே சென்று தங்களை பதிவு செய்துகொள்ளலாம் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

English Summary

A special camp to revise the voter list will be held across Tamil Nadu tomorrow and the day after tomorrow.

Vignesh

Next Post

தலைகீழாகும் பூமி!. வட துருவத்தில் ரஷ்யாவை நோக்கி வேகமாக நகரும் காந்தப்புலம்!. விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

Fri Nov 22 , 2024
Earth's Magnetic North Pole is moving rapidly towards Russia: What does it mean?

You May Like