fbpx

முன்னாள் காதலியை மீண்டும் தொடர்பு கொண்ட மாணவன்..!! காதலனிடம் போட்டுக் கொடுத்ததால் விபரீதம்..!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கணக்குப்பிள்ளையூரைச் சேர்ந்தவர் குரு பிரகாஷ். இவர் அய்யர்மலையில் உள்ள டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு இளங்கலை படிப்பு படித்து வருகிறார். இவரும் அதே கல்லூரியில் படிக்கும் அய்யர்மலை சேர்ந்த மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருவருக்கும் காதல் முறிவு ஏற்பட்டுள்ளது. அதன்பின் கல்லூரி மாணவி கீழக் குட்டப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், குரு பிரகாஷ் மீண்டும் அந்த கல்லூரி மாணவியுடன் தொடர்பு கொண்டு பேசியபோது கல்லூரி மாணவி, காதலன் ஆட்டோ டிரைவர் அருண்குமாரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து அருண்குமார், குருபிரகாஷிடம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி பேசியபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை மனதில் வைத்து கொண்டு அருண்குமார் நேற்று கல்லூரி மாணவர்கள் செல்லதுரை, விஜய் ஆகியோர் மூலம் சமாதானம் பேசுவதற்காக குரு பிரகாஷை வரவழைத்துள்ளார். அப்போது குரு பிரகாஷின் பெரியப்பா மகனான ஐடிஐ மாணவன் விக்னேஷுடன் குரு பிரகாஷ் வந்துள்ளார்.

அய்யர்மலை தெப்பக்குளத்தில் வைத்து குரு பிரகாஷை அருண்குமார், அவரது சகோதரர் சங்கர், கல்லூரி மாணவர்கள் செல்லதுரை, விஜய், சரவணன் உள்ளிட்டோர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
குருபிரகாஷைத் தாக்குவதை தடுக்க வந்த விக்னேஸ்வரனையும் உருட்டு கட்டை மற்றும் கற்களால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த குருபிரகாஷ் மற்றும் விக்னேஷ்வரன் ஆகிய இருவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், பலத்த காயம் அடைந்த விக்னேஷ்வரன் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக குளித்தலை போலீசார் கீழ குட்டப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருண்குமார், வீரகுமாரன்பட்டியை சேர்ந்த செல்லதுரை, கண்டியூரை சேர்ந்த விஜய், வை.புதூரைச் சேர்ந்த சரவணன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவாக இருந்த சந்தோஷ் குமார் என்ற கல்லூரி மாணவனை குளித்தலை போலீசார், கைது செய்தனர். இவர்கள் 5 பேரையும் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய பின்பு திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர்.

Chella

Next Post

முன்னாள் காதலிக்கு போன் செய்த காதலன்……! அநியாயமாக பறிபோன சகோதரரின் உயிர் கரூர் அருகே சோகம்…..!

Thu Apr 20 , 2023
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கணக்குப்பிள்ளையூரை சேர்ந்தவர் குரு பிரகாஷ். இவர் அய்யர்மலையில் உள்ள டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை 2ம் ஆண்டு படித்து வருகின்றார். இந்த நிலையில், குரு பிரகாஷும் அதே கல்லூரியில் படிக்கும் அய்யர்மலை பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் தான் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக காதலர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அவர்கள் […]

You May Like