fbpx

#சேலம் : மருத்துவம் படிக்க சென்ற மாணவன் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியதால் பரபரப்பு..!

சேலம் மாவட்ட பகுதியில் உள்ள அரியானூரில் தனியார் மருத்துவக் கல்லூரியில் அருள்மொழி குமார் என்பவரின் மகன் நிர்மல் குமார் முதுநிலை பிசியோதெரபி துறையில் பயின்று வருகிறார். 

இந்த நிலையில் தினமும் சொந்த ஊருக்கு சென்று திரும்ப முடியாத நிலையால் கல்லூரிக்கு எதிரிலே தனியார் விடுதியில் ரூம் ஒன்றை எடுத்து இருந்துள்ளார். தினமும் தனது பெற்றோரிடம் செல்போனில் பேசுவது வழக்கமாக கொண்ட நிர்மல் நேற்று காலையில் இருந்து பெற்றோரிடம் பேசவில்லை. 

பெற்றோர்களே அழைத்த நிலையிலும் நிர்மல் எடுக்கவில்லை. இது பற்றி பெற்றோர் அவரது நண்பர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டுள்ள நிலையில், நிர்மல் குமார் தங்கி இருக்கும் இடத்திற்குச் சென்று அவரை சந்திக்க சொல்லி கூறியுள்ளார்.

நிர்மல் தங்கியுள்ள அறைக்கு சென்று பார்த்த போது கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது.  வெகு நேரமாக நண்பர்கள் கதவை தட்டிய போதும், கதவை திறக்கவில்லை. இதனை தொடர்ந்து சந்தேகம் அடைந்த நண்பர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, நிர்மல் குமார் தூக்கிட்டு இறந்து கிடந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கான காரணம் என்னவென்று விசாரணை செய்து வருகின்றனர்.

Rupa

Next Post

#திருப்பதி : பயணிகளுக்கு சமைக்கும் போது திடீரென்று இரயிலில் தீ பற்றிய சம்பவம்..!

Sat Nov 19 , 2022
குஜராத் மாநில பகுதியில் அகமதாபாத்தில் இருந்து சென்னையை நோக்கி செல்லும் நவஜீவன் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் நேற்று முந்தைய தினத்தில் புறப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 2.30 மணியில் திருப்பதி மாவட்டத்தின் கூடூர் ரயில் நிலையத்தில் சந்திப்பு இடையே வந்த போது, ரயிலில் உள்ள சமையல் செய்கின்ற பெட்டியில் தேவையான காலை உணவு பயணிகளுக்கு தயாரிக்க ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.  திடீரென அந்த பெட்டியில் தீப்பற்றி புகை பரவிய நிலையில், பயணிகள் […]

You May Like