fbpx

செம வாய்ப்பு…! இவர்கள் அனைவருக்கும் தமிழக அரசு வழங்கும் ரூ.2.5 லட்சம்‌ மானியம்‌…! எப்படி விண்ணப்பிப்பது…? முழு விவரம்

கோவிட்‌-19 பெருந்தொற்று பரவலால்‌ வெளிநாட்டில்‌ வேலையிழந்து நாடு திரும்பிய புலம்பெயர்‌ தமிழர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை வழங்கும்‌ நோக்கத்துடன்‌ தமிழ்நாடு அரசு “புலம்பெயர்ந்தோர்‌ வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ திட்டம்‌” என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின்‌ கீழ்‌ வெளிநாடுகளில்‌ சூறைந்தது 2 ஆண்டுகள்‌ பணிபுரிந்துகோவிட்‌-19 பெருந்தொற்று பரவலால்‌ வேலையிழந்து நாடு திரும்பிய தமிழர்கள்‌சுயதொழில்‌ தொடங்க மானியத்துடன்‌ இணைந்த கடனுதவி பெற்று பயன்பெறலாம்‌. அவர்கள்‌ கோவிட்‌-19 பெருந்தொற்று பரவலினால்‌ 04.01.2020 அன்று அல்லது அதற்கு பிந்தைய நாட்களில்‌ தமிழ்நாடு திரும்பி இருக்க வேண்டும்‌. குறைந்தது 8 ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. வயது 18 க்கு மேலாகவும்‌ 55 க்கு மிகாமலும்‌ இருக்க வேண்டும்‌. வியாபார மற்றும்‌ சேவை தொழில்‌ திட்டங்களுக்கு அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.5 இலட்சம்‌ ஆகவும்‌ உற்பத்தி தொழில்‌ திட்டங்களுக்கு ரூ.15 லட்சம்‌ திட்ட மதிப்பீடாக இருக்க வேண்டும்‌.

பயனாளர்‌ தம்‌ பங்காக பொது பிரிவுபயனாளர்கள்‌ எனில்‌ திட்ட தொகையில்‌ 10% மற்றும்‌ பெண்கள்‌, இடஒதுக்கீட்டு பிரிவினர்‌ உள்ளட்ட சிறப்பு பிரிவினர்‌ எனில்‌ 5% செலுத்த வேண்டும்‌. மீதமுள்ள தொகை வங்கிக்‌ கடனாக வழங்கப்படும்‌. அரசு, திட்டத்‌ தொகையில்‌ 25% அதிகபட்சம்‌ ரூ.2.5 இலட்சம்‌ என வழங்கும்‌ மானியம்‌ 3 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்டு பின்னர்‌ கடனுக்குசரிகட்டப்படும்‌. கடன்‌ வழங்கப்பட்ட 6 மாதங்கள்‌ கழித்து 5 ஆண்டுகளுக்குள்‌ திரும்ப செலுத்தப்பட வேண்டும்‌.

Vignesh

Next Post

ஜுன் 7 பள்ளிகள் திறப்பு...! அனைத்து ஆசிரியர்களும் இது கட்டாயம்... பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு...!

Wed May 31 , 2023
அரசு பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்கையை அதிகரித்திட விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தொடக்கக்‌கல்வி இயக்கக நிர்வாகத்தின்‌ கீழ்‌ செயல்படும்‌ ஊராட்சி ஒன்றிய , நகராட்சி,அரசு தொடக்க மற்றும்‌ நடுநிலை பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களின்‌ எண்ணிக்கை குறைவாக உள்ளது. நம்‌பள்ளிகளில்‌ 2023-24ஆம்‌ கல்வியாண்டில்‌ மாணவர்‌ சேர்க்கையை அதிகரிக்க மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட வேண்டும்‌. 2023-2024ஆம்‌ கல்வியாண்டில்‌, அரசு பள்ளிகளில்‌ மாணவர்‌ […]

You May Like