fbpx

திடீரென வந்த வாட்ஸ் அப் வீடியோ கால்..!! எடுத்து பேசிய இளைஞரை கவிழ்த்த இளம்பெண்..!! ரூ.6.50 லட்சம் அபேஸ்..!!

இண்டர்நெட்டும் ஸ்மார்ட் போனும் பல வகைகளில் நம்முடைய பணிகளை எளிதாக்கியுள்ளன. ஆனால், அதை சரியாக கையாளவில்லை என்றால் அதற்காக நாம் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். அப்படித் தான் மும்பையில் இளைஞர் ஒருவர், ஒரே ஒரு வீடியோ காலுக்கு ரூ.6.50 லட்சத்தை கொடுத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

மும்பையில் கார்ப்ரேட் கன்சல்டண்டாக வேலை பார்த்து வரும் 39 வயது இளைஞர் ஒருவருக்கு கடந்த மார்ச் 17ஆம் தேதி திடீரென தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ் அப் வீடியோ கால் வந்துள்ளது. அந்த இளைஞரும் அந்த அழைப்பை எடுத்து பேசியுள்ளார். அப்போது எதிர் முனையில் ஒரு பெண் பேசியுள்ளார். பேசிக் கொண்டு இருக்கும் போதே அந்தப் பெண் திடீரென தனது ஆடைகளை கழற்றியுள்ளார். ஒரு கட்டத்தில் முழு நிர்வாணமாக நின்றுள்ளார். ஒரு கணம் சபலப்பட்டாலும், அந்த இளைஞர் அழைப்பை துண்டித்துள்ளார். சிறிது நேரம் கழித்து அந்த இளைஞருக்கு தெரியாத மற்றொரு எண்ணில் இருந்து ஒரு வீடியோ மெசேஜ் வந்துள்ளது.

அந்த வீடியோவில் நிர்வாணமான ஒரு பெண்னுடன் தான் வீடீயோ காலில் பேசுவதைப் போல காட்சி இருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ந்து போன அந்த இளைஞர் தனக்கு வந்த வீடியோவை டெலிட் செய்திருக்கிறார். அடுத்த நாள் அந்த இளைஞருக்கு மற்றொரு தெரியாத செல்போன் எண்ணிலிருந்து அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் இருந்தவர், தான் டெல்லி காவல்துறை ஆணையர் அலுவலத்தில் இருப்பதாகவும், நிர்வணமான ஒரு பெண்னுடன் அந்த இளைஞர் இருப்பதை போன்ற வீடியோ தன்னிடம் இருப்பதாகவும், அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார். அப்படி சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யாமல் இருக்க தான் சொல்லும் நபரிடம் ரூ.50 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மானத்திற்கு பயந்த அந்த இளைஞர் அதற்கு ஒப்புக்கொள்கிறார். பிறகு தன்னை தொடர்பு கொண்ட நபரிடம் ரூ.50 ஆயிரம் கொடுத்துள்ளார் அந்த இளைஞர். அப்படியாக மார்ச் 18ஆம் தேதி முதல் 25ஆம் தேதிக்குள் பல கட்டமாக அந்த இளைஞர் சுமார் ரூ.6.50 லட்சம் கொடுத்துள்ளார். மேலும், பணம் கேட்டு மர்ம கும்பல் மிரட்டவும், அதற்கு மேல் பணம் கொடுக்க முடியாமல் அந்த இளைஞர் இதுகுறித்து மும்பை மாநகரத்திற்குட்பட்ட காசர்வடவாலி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர், அடையாளம் தெரியாத 15 நபர்கள் மீது ஐபிசி 420 உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

திருமணம் முடிந்த கையோடு குட்காவை போட்டு எனர்ஜி ஏற்றிக்கொண்ட மணப்பெண்..!! வைரல் வீடியோ உள்ளே..!!

Thu Jun 1 , 2023
ராஜஸ்தானில் ஆயிரக்கணக்கான ஜோடிகள் கலந்து கொள்ளும் வெகுஜன திருமண விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அந்த திருமணத்தின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் பரான் மாவட்டத்தில் திருமண விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த திருமண விழா ஏற்கனவே உலக சாதனையில் இடம்பெற்றுள்ளது. மொத்தம் 2,222 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. மே 26 அன்று நடந்த இந்த பொது […]

You May Like